முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
Also Read | அஜித், சூர்யாவுக்கு குரல் கொடுத்தவரா.? பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் திடீர் மரணம்..
முன்னதாக இந்நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
'வுமன்'ஸ் டே அவுட் ' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தற்போது இந்த நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். இதற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்த படத்திற்கு LGM - Lets Get Married என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். யோகி பாபு, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பிரபல நடிகை இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா, நாச்சியார் படத்திலும் நடித்து இருந்தார்.
Also Read | பிரபல மலையாள நடிகருடன் சூர்யா - ஜோதிகா... இணையத்தை கலக்கும் புகைப்படம்