தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரீது வர்மா நடித்து 2016 இல் வெளியான திரைப்படம் பெல்லி சுப்லு.
![Harish Kalyan and Priya Bhavani Shankar romance reels video Harish Kalyan and Priya Bhavani Shankar romance reels video](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/harish-kalyan-and-priya-bhavani-shankar-romance-reels-video-new-home-mob-index.jpg)
இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி, வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழில் உருவாகிறது. தமிழில் இந்த திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் இணை நடிக்கின்றனர்.
நடிகர் ஹரீஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இதனை தொடர்ந்து ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்திலும், அதனை அடுத்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின்னர் தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதனிடையே தான் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் பெல்லி சுப்லு படத்தின் தமிழில் ரீமேக்கான ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இதனிடையே ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து செய்யும் ஒரு ரொமான்ஸ் ரீல்ஸ், இணையதளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஹரீஷ் கல்யாண், “தட் லவ்-ல இருந்தாலே கண்ணுக்கு எல்லாம் ஹை ஸ்பீடுல தெரியுமாம் மாமன்ட்” என்று பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்ததும், ஹரீஷ் கல்யாண் & ப்ரியா பவானி சங்கர் ஜோடி செம க்யூட்டாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.
திரைப்படத்தை தாண்டி, தனி வாழ்க்கையிலும் நல்ல நண்பர்களாக ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இருந்து வருகின்றனர்.
அன்மையில் ப்ரியா பவனி சங்கர் தம்முடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த ஒரு பதிவில், “யாரு டென்ஷனாக இருந்தால் நமக்கு என்ன? ப்ரியா மாதிரி இருங்கள்” என்று பதிவிட, அதற்கு ஹரீஷ் கல்யாண், “ஓமன பெண்ணே ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் இப்படியா? இல்லை..??” என்று கேள்விக்குறி வைத்து கமெண்ட் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ப்ரியா பவனி சங்கர், “எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேட்கலாமா” என பதிவிட்டிருக்கிறார். முன்னதாக ‘ஓமன பெண்ணே’ திரைப்படத்தில் ‘போதை கண்ணே’ என்கிற பாடல் அனிருத் குரலில் வெளியாகி ஹிட் ஆனது குறிப்பிடத் தக்கது.