TWITTER SPACE-ல் FANS-உடன் இணையும் ஹரீஷ் கல்யாண் - ப்ரியா பவானி ஷங்கர்.. எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் மாற்று மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை, அதன் உரிமம் பெற்று தங்கள் மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடும் வழக்கம் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.


அதன்படி கடந்த 2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் 'பெல்லி சூப்லு'. தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்க, ஹரீஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

தமிழில் 'ஓ மணப்பெண்ணே', என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
'ஓ மணப்பெண்ணே', திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், கொரோனா பெரும் தொற்று காரணமாக வெளியிடும் தேதி அறிவிக்கப்டாமல் இருக்கிறது. ஊரடங்கு விதிமுறைகளைப் பொறுத்து படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதா இல்லை ஓடிடி - யில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள். விரைவில் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகன் ஹரீஸ்கல்யாண், நாயகி ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுந்தர் ட்விட்டர் ஸ்பேஸில் இன்றிரவு 9 மணிக்கு இணையவுள்ளனர். ரசிகர்கள் தங்களது கேள்விகளை ட்விட்டரில் பதிவிட்டு விளக்கங்களை பெறலாம் என அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதனால் ஹரிஸ்கல்யாண், ப்ரியா பவானி ஷங்கரின் ரசிகர்கள் தங்கள் கேள்விகளை தயார் படுத்திக்கொண்டு மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan and Priya Bhavani Shankar joins fans on Twitter

People looking for online information on Harish Kalyan, Priya Bhavani Shankar will find this news story useful.