சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம்.. அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்.. சம்பவம் இருக்கு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Advertising
>
Advertising

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தாமரை எழுதிய 'ஒரு மனம்' என்ற சிங்கிள் பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அண்மையில் நடிகர் விக்ரம் & இயக்குனர் கௌதம் மேனன் சந்தித்து படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து இருந்தனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் பணிகள் துவங்கியுள்ளதாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் பணிகள் துவங்கிவிட்டன. டால்பி 9.1.4 இல் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Haris Jeyaraj Gave update about Dhruvanatchathiram Movie

People looking for online information on Dhruva Natchathiram, Gautam Menon, Haris Jeyaraj, Vikram will find this news story useful.