சம்பவம் பண்ண காத்திருக்கும் ஹர்பஜன் சிங்!!! வெளியானது ‘FRIENDSHIP’ படத்தின் மிரட்டலான TRAILER.. VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் லாஸ்லியா மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் பலர் நடித்திருக்கும் திரைப்படம் Friendship.

இந்த திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் ஆர்யா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. இந்த திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர். 

இந்த படத்துக்கு சாந்தகுமார்.C ஒளிப்பதிவு செய்துள்ளார். D.M.உதயகுமார் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை JPR & Stalin தயாரித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக அவ்வப்போது அவர் தமிழில் ட்வீட் செய்வதும், தமிழகத்தின் சம்பவங்களுடன் அல்லது திரைப்படங்களுடன் தொடர்புப்படுத்தி பதிவுகளை பதிவிடுவதும் பிரபலம்.

தவிர நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படத்திலும் ஹர்பஜன் சிங் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி டிக்கிலோனா திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Also Read: அடேங்கப்பா.. நம்ம ஏ.ஆர்.ரஹ்மானை மீசையோட பாத்துருக்கீங்களா? சும்மா வேற வெல்ல இருக்கு!

தொடர்புடைய இணைப்புகள்

Harbhajan Singh, Losliya, Arjun Friendship movie trailer ஹர்பஜன்

People looking for online information on Arjun Sarja, Friendship, Harbhajan Singh, Losliya will find this news story useful.