ஹன்சிகாவிற்கும் இவருக்கும் கல்யாணமா? - வெளியான செய்தி - ஹன்சிகா கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து 'மகா' படத்தில் நடித்துள்ளார்.  இந்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். இது ஹன்சிகாவின் 50வது படம் என்று கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'வாலு' படத்துக்கு பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு 'அடக்கடவுளே ! அவர் யார் ?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒருவர் ''ஏன் என்கிட்ட சொல்லல''னு கேட்டதற்கு 'எனக்கே இப்போ தான் தெரியும்' என்று பதிலளித்துள்ளார்.

Hansika tweets about her marriage allegations | ஹன்சிகா திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம்

People looking for online information on Hansika Motwani, Marriage will find this news story useful.