பிரபல OTT-க்கு ஹன்சிகா - சாந்தனு நடிக்கும் புதிய வெப் - சீரிஸ்! BTS IMAGE உடன் வெளியான UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல ஒடிடிக்காக நடிகை ஹன்சிகா மோத்வானி - சாந்தனு இணைந்த புதிய வெப் சீரிஸின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ஹிஜாப் விவகாரம்: தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன் பரபர டிவீட்

இயக்குனர் ராஜேஷ், சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர். இப்போது மல்டி ஸ்டார் வெப் தொடரை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த தொடரில் சாந்தனு பாக்யராஜ், ஹன்சிகா மோத்வானி, ஜனனி ஐயர், முகன் ராவ், சுப்பு பஞ்சு, நாராயண் லக்கி மற்றும் அபிஷேக்  நடிக்கின்றனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக இந்த வெப் தொடர் உருவாகிறது. இந்த படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இத்னை படக்குழு BTS புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சாந்தனு பாக்யராஜ், வளர்ந்து வரும் தமிழ் ஹீரோக்களில் முக்கியமானவர். சாந்தனு நடிப்பில் கடைசியாக முருங்கைக்காய் சிப்ஸ் படம் வெளியானது. தற்போது விக்ரம் சுகுமாறன் இயக்கும் ராவணக்கோட்டம் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்.

இயக்குனர் ராஜேஷின் கடைசி வெளியீடான வணக்கம் டா மாப்ள கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Sun NXT மூலம் நேரடியாக  OTT ரிலீசில் வெளியிடப்பட்டது. ஹன்சிகா மோத்வானி மஹா படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார். அதனையடுத்து ரவுடி பேபி, பார்ட்னர் படமும் தயாராகி வருகிறது.

"BEAST", "தளபதி66" படங்களுக்கு பின் விஜய் நடிக்க போகும் இரண்டு படங்கள்.. FANS-க்கு டபுள் ட்ரீட்டா?

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Shanthanu SMS Rajesh Disney Hotstar Webseries shooting update

People looking for online information on சாந்தனு, வெப் - சீரிஸ், ஹன்சிகா, Hansika, Shanthanu, SMS Rajesh, Webseries will find this news story useful.