திருமணத்திற்கு பின் கணவருடன் வெளிநாட்டில் ஹன்சிகா மோத்வானி இன்பச்சுற்றுலா.. CUTE PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Advertising
>
Advertising

Also Read | துபாய் வானத்தில் பறந்து 'துணிவு' படத்தின் வேறலெவல் ப்ரோமோஷன்.. செம்ம வைரல் வீடியோ!

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.

மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  வைரலாகியது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள நாடாளுமன்ற பகுதியில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தில் ஹன்சிகா மோத்வானி உலா வரும் வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா பகிர்ந்துள்ளார். மேலும் தனது கணவருடன் ஊர் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Also Read | வாரிசு படத்தின் "வா தலைவா" பாடல் பீட்.. தமன் பகிர்ந்த தெறி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani Sohael Khaturiya at Budapest Hungary

People looking for online information on Budapest Hungary, Hansika Motwani, Hansika Motwani Sohael Khaturiya, Sohael Khaturiya will find this news story useful.