நடிகை ஹன்சிகாவின் திருமணம்.. ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹன்சிகாவின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர்.

பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம்

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹன்சிகா மோத்வானியின் 11-வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani Marriage on Disney plus Hotstar OTT Sources

People looking for online information on Disney Plus Hotstar, Hansika Motwani, OTT will find this news story useful.