"இதுக்குதான் வெயிட்டிங்"... சிம்பு, ஹன்சிகா நடிக்கும் 'மஹா'! வெளியானது வேறலெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. முதல் படத்திலே 'யாருடா இந்த இறக்குமதி' என தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து தன் இருப்பை உறுதி செய்தார்.

இந்நிலையில்  நடிகை ஹன்சிகா தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘மஹா’என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதையில் உருவாகி இருக்கும் திகில் படம். இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் தொடர்பான  நீதிமன்ற வழக்கு பிரச்னைகள் எல்லாம் சுமூகமாக முடிந்த நிலையில் ’மஹா’படத்தின் டீசர் வரும் ஜூலை 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'வாலு', திரைப்படத்திற்கு பிறகு சிம்பு, ஹன்சிகா நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படமும் கிட்டத்தட்ட வெளியாக தயாராகி விட்டது என்பது கூடுதல் தகவல்.

Tags : Dhansika, Simbu

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani in Maha Movie release new upadate

People looking for online information on Dhansika, Simbu will find this news story useful.