சென்னையின் பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர்.

பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, சென்னையில் உள்ள பிரபல காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹன்சிகா மோத்வானியுடன் இயக்குனர் கண்ணனும் உடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்.

இப்படத்தில் ஆர்.கண்ணன் இயக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வா கவனித்துக்கொள்கிறார்.இந்த படத்தில் ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், ஆகிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani did Dharshan at famous Kaligambal Temple

People looking for online information on Hansika Motwani, Kaligambal Temple, R Kannan will find this news story useful.