திருமண விழாவில் கணவருடன் நடனமாடி அசத்திய ஹன்சிகா.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர்.

பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை இன்று டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் சோஹேல் கதூரியாவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில் வெண்ணிற உடையணிந்து மணமக்கள் காட்சியளிக்கிறார்கள்

திருமண விழாவில் கணவருடன் நடனமாடி அசத்திய ஹன்சிகா.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani dancing with Sohael Khaturiya in wedding

People looking for online information on Hansika Motwani, Sohael Khaturiya will find this news story useful.