திருமண மோடில் ஹன்சிகா.. தோழிகளுக்கு BACHELORS PARTY.. வைரலாகும் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தோழிகளுக்கு அவர் கொடுத்த Bachelors Party தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மெல்ல மெல்ல முன்னணி நடிகையாகவும் உருவானவர் ஹன்சிகா மோத்வானி.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ள ஹன்சிகா, தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்து சில அதிகாரப்பூர்வ தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹன்சிகா மோத்வானியின் 11-வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்போது ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்பம் நண்பர்களாக இருந்து உறவுகள் என்ற வோறொரு புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக தனது தோழிகளுக்கு கிரீஸ் நாட்டில் Bachelors Party கொடுத்துள்ளார் ஹன்சிகா.

இது தொடர்பான வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே போல, இந்த பார்ட்டிக்கு மத்தியில் முழுக்க முழுக்க உற்சாகமாக இருக்கும் ஹன்சிகா, நடுவே தோழிகளுடன் ஜாலியாக நடனம் ஆடும் விஷயங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது.

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

திருமண மோடில் ஹன்சிகா.. தோழிகளுக்கு BACHELORS PARTY.. வைரலாகும் வீடியோ!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hansika motwani bachelors party for her friends

People looking for online information on Bachelors Party, Hansika Motwani, Marriage will find this news story useful.