MAHA: ஹன்சிகாவின் 50வது படம்.. கௌரவ தோற்றத்தில் சிம்பு? ரிலீஸ் விஷயத்தில் பரபரப்பு அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Etcetera entertainments தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் மகா.

Advertising
>
Advertising

நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்சி மோத்வானி தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற முன்னணி நடிகை. தமிழில் முன்னணி நடிகர்க்ளுடன் இணைந்து நடித்துள்ள ஹன்சிகா, மகா திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுடன் ஹன்சிகா வாலு திரைப்படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை அடுத்து ஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்து நடித்துள்ள படம் இந்த படம்.

ஹன்சிகாவின் 50வது படம்

நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் அவரது 50 வது திரைப்படம். “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கௌரவ பாத்திரத்தில் சிம்பு

ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். அண்மையில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு கௌரவ பாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் தோன்றுவதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதர நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்

மேலும் இந்த திரைப்படத்தில் ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை, Etcetera Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தொழில்நுட்பக்குழு

தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J.லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

மகா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில் தான் “மகா”  திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ள தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Also Read: அடுத்த கட்ட பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஐதராபாத்தில் இருந்து வெளியான பரபரப்பு ஃபோட்டோ! செம்ம சர்ப்ரைஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Hansika 50th film Maha STR pivotal role rights update

People looking for online information on Ba, Baby Manasvi, Hansika 50th film, Hansika 50th film Maha, Karunakaran, Maha STR, Manasvi, Srikanth, Thambi Ramaiah will find this news story useful.