கவின் நடித்த DADA.. ஸ்பெஷல் ஷோ படம் பார்க்க வந்த H. வினோத்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது.

Advertising
>
Advertising

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  காதல் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் சுசீந்திரன், பாவனி, அமீர், இயக்குனர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையரங்கினுள் நுழையும் முன் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை வினோத் சந்தித்து பேசும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

கவின் நடித்த DADA.. ஸ்பெஷல் ஷோ படம் பார்க்க வந்த H. வினோத்! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Watching Kavin Starring Dada Movie Premier Show

People looking for online information on Dada, Dada Celebrity Preview, H Vinoth, Kavin will find this news story useful.