H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.!.. கதை சொல்லியாச்சா? EXCLUSIVE UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் H. வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | அதிர்ச்சி.! பிரபல தமிழ் நடிகர் & இயக்குனர் ராமதாஸ் மாரடைப்பால் மரணம்..

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.  H.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

  வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உலகநாயகன் கமல்ஹாசன் உடன் புது படத்தில் இணைவது குறித்த தகவல்களை வினோத் பகிர்ந்துள்ளார்.  இந்த நிகழ்வில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும்  கலந்து கொண்டார். அப்போது, "நீங்கள் அடுத்து வினோத் படம் எப்படி இருக்கனும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என விஜய் மில்டனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் மில்டன்," வினோத், கமல் சார்ட்ட ஒரு கதை சொல்லி படம் பன்றார்னு சொல்லும் போது அது மிக சந்தோஷமான தருணம். அந்த படத்தில் கேமரா மேன் அல்லது உதவி இயக்குனராக வாய்ப்பு கேக்கலாமானு யோசிச்சேன்." என விஜய் மில்டன் கூறினார். அப்போது குறுக்கிட்ட வினோத்,"கமல் சார்க்கு இன்னும் நான் கதை சொல்லல சார் " என சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் பேசிய விஜய் மில்டன், "கமல் - வினோத் காம்பினேஷன் ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படம் நடக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட் போய் பாக்கனும். அந்த படத்தை தியேட்டரில் பார்க்கனும்" என விஜய் மில்டன் பேசினார்.

Also Read | "நீ உயரனும் என்பதே என் இலக்கு".. டைட்டில் வென்ற பின் மகனை சந்தித்த அசிம்.. உருக்கமான பதிவு!!

H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.!.. கதை சொல்லியாச்சா? EXCLUSIVE UPDATE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Vijay Milton Talks about Kamal Haasan Project

People looking for online information on H Vinoth, Kamal Haasan, Vijay Milton will find this news story useful.