அஜித்திற்கு முதல்முறை சொன்ன கதை.. கேரக்டர் பெயரே செம்ம மாஸா இருக்கே 🔥.. H. வினோத் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | "REAL WINNER துணிவு -ஆ ..?.." "ரிலீஸ்க்கு முன்னாடியே சொல்லிட்டேன்" - மனம் திறந்த H. வினோத்!

H.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது துணிவு படம் குறித்தும் நடிகர் அஜித் குறித்தும் பல தகவல்களை வினோத் பகிர்ந்துள்ளார். "துணிவு படத்தின் கதை தான் முதல் முறையாக நடிகர் அஜித்திடம் சொன்ன கதையா?" என்ற கேள்விக்கு பதில் அளித்த வினோத், "துணிவு கதை இல்லை அஜித் சாருக்கு நான் முதலில் கூறிய கதை. அது ஒரு Con Man கதை. அபரஜித் எனும் கேரக்டர் பற்றிய கதை அது. அதில் அஜித் சார் பெயரும் வரும். அபாரம்+ அஜித்= அபரஜித். அபரஜித் என்றால் யாராலும் வெல்ல முடியாதவன் என்று பொருள். அது நடக்கவில்லை. துணிவு வேற கதை" என வினோத் பதில் அளித்துள்ளார்.

Also Read | VIDEO: "நான் இயக்கிய இந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".. காரணத்தோடு விளக்கிய H. வினோத்!

அஜித்திற்கு முதல்முறை சொன்ன கதை.. கேரக்டர் பெயரே செம்ம மாஸா இருக்கே 🔥.. H. வினோத் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Talks about His Con Man Story for Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, H Vinoth will find this news story useful.