துணிவு படத்தில் 'NO GUTS NO GLORY' வாசகம் ஏன்?.. H. வினோத் கொடுத்த செம விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | உதயநிதியுடன் A.R. ரஹ்மான்.. ARR பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த செம்ம போட்டோ..

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் & மஞ்சு வாரியர் கலைஞர் தொலைக்காட்சி சேனலுக்கு துணிவு படம் குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி துணிவு ஸ்பெஷல் என்ற பெயரில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில், துணிவு படத்தில் No Guts No Glory என்ற வாசகம் ஏன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வினோத், "அதான் படம்.. ஹீரோ செய்யுற விஷயம் எல்லாம் பயங்கர Guts ஓட இருக்கும். மத்தவங்க செய்ய யோசிக்குற நேரத்தில் அதை செய்யும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். அஜித் சார் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தானே!" என வினோத் பதில் அளித்துள்ளார்.

Also Read | கைக்குழந்தையாக அமீன்😍.. "எனக்கு ஆசிரியராகவும்".. பிறந்தநாளில் பகிர்ந்த Throwback போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Interview in Kalaignar TV about Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, H Vinoth, H Vinoth Interview, Kalaignar TV, Thunivu will find this news story useful.