"அஜித் சாருக்கு முதல்ல சொன்ன CON MAN கதைல தனுஷ்".. இயக்குனர் H. வினோத் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டியில் தனது அடுத்த தனுஷ் படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை தொடங்கி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வரை பல படங்களில் நடித்துள்ள தனுஷ், தேசிய விருது பெற்ற நடிகர்.

வெற்றிமாறனின் இயக்கத்திலான பொல்லாதவன், ஆடுகள, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும், செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களும் தனுஷின் திரைவாழ்வில் முக்கிய படங்களாக அமைந்தன. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேட்பன் மில்லர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதேபோல் சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்  H.வினோத், சமூக குற்ற பின்னணிகள் தொடர்பான கதைகளை வலுவான திரைக்கதைகள் மூலம் படமாக்க கூடிய இயக்குநராக நம்பிக்கையை பெற்றவர். கார்த்தி நடிப்பில் தீரன், அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய  H.வினோத், அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை  H. வினோத் இயக்கவுள்ளதாக  தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இச்சூழலில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வினோத் அளித்த பேட்டியில், "அஜித் சாருக்கு முதலில் கூறிய (நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்பு) கதை துணிவு அல்ல. சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்ட வடிவமான ஒரு கான் மேன் கதை தான் முதலில் கூறிய கதை. அந்த கதையை தான் தனுஷ் சாருக்கு சொல்ல போறேன்" என வினோத் பதில் அளித்துள்ளார்.

"அஜித் சாருக்கு முதல்ல சொன்ன CON MAN கதைல தனுஷ்".. இயக்குனர் H. வினோத் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Interview about ConMan Story Ajithkumar Dhanush

People looking for online information on Ajith Kumar, Conman, Dhanush, H Vinoth, Thunivu will find this news story useful.