இயக்குனர் வினோத் மீண்டும் நடிகர் அஜித் உடன் 4-வது முறையாக இணைவது குறித்து பேசியுள்ளார்.
Also Read | H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.!.. கதை சொல்லியாச்சா? EXCLUSIVE UPDATE
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.
வலிமை படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.
நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் துணிவு.
வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு வினோத் பதில் அளித்தார். குறிப்பாக AK கூட மூன்று படம் பண்ணிட்டீங்க. அஜித் ரசிகர்கள் உங்களை மிஸ் பண்றோம். உங்களை மிஸ் பண்ணாம இருக்க 4-வதா ஒரு படம் கிடைச்சா எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வினோத், "இப்போ என்கிட்ட கதை எதுவும் எழுதி இல்லை. நானும் அஜித் சாரும் இரண்டு படம் பண்ண முயற்சி செய்தோம்.
நான் முதல் முறையாக அஜித் சாரை சந்தித்த போது கான் மேன் கதை சொன்னேன். அது அப்படியே இருக்கு. இன்னொரு கதை, நேர்கொண்ட பார்வை படம் முடிந்த பிறகு முழு படமும் ஐரோப்பாவில் நடப்பது போல முதல் 10 நிமிடம் தவிர்த்து முதல் 1:30 மணி நேரமும் ஆக்சன் படமாக இருக்கும் படம் அது. அந்த ஐரோப்பாவில் நடக்கும் கதையை படம் பண்ண முயற்சி செய்வேன்" என வினோத் பதில் அளித்தார்.
Also Read | லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'ருத்ரன்'.. ஷூட்டிங் & ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!