VIDEO: "நான் இயக்கிய இந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".. காரணத்தோடு விளக்கிய H. வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது இயக்கத்தில் தனக்கு பிடித்த படம் குறித்து இயக்குனர் ஹெச். வினோத் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "துணிவு, சிவகார்த்திகேயன் நடித்திருந்தால்.. இந்த விஷயத்தை சேத்துருப்பேன்".. H. வினோத் EXCLUSIVE!

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.  H.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.  'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனது இயக்கத்தில் தனக்கு பிடித்த படம் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் வினோத் பேசியுள்ளார். தனக்கு "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் மிகவும் பிடித்த திரைப்படம் என வினோத் கூறினார். அதற்கு காரணமாக "என்னுடைய வாழ்க்கை அணுகுமுறையை நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாற்றியது" என வினோத் கூறினார்.

Also Read | "REAL WINNER துணிவு -ஆ ..?.." "ரிலீஸ்க்கு முன்னாடியே சொல்லிட்டேன்" - மனம் திறந்த H. வினோத்!

VIDEO: "நான் இயக்கிய இந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".. காரணத்தோடு விளக்கிய H. வினோத்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth about his favourite film NKP from his direction

People looking for online information on H Vinoth, H Vinoth about his favourite film will find this news story useful.