கொரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட லாக்டவுன் பலருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுத்தி விட்டது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஆடுஜீவிதம் படத்துக்காக ஜோர்டானில் ஷூட்டிங் சென்றபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அங்கேயே பல நாட்கள் படக்குழுவினருடன் சிக்கி, வீடு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டார்.
தனிமை, சரியான இந்திய உணவு இல்லாமை, குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில் இருந்தது என்று அவர் தன்னுடைய நிலையை உருக்கமாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். இந்நிலையின் சமீபத்தில் பத்திரமாக ஆடுஜீவிதம் படக்குழுவினருடன் நாடு திரும்பினார் பிருத்திவிராஜ். நீண்ட பிரிவுக்குப் பின் குடும்பத்தாருடன் இணைந்தார்.
மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமாக லூசிபர் படம் மூலம் இயக்குனர் ஆனார் பிருத்விராஜ். தற்போது ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடித்தபின், லூசிஃபர் 2 படத்தை இயக்குவார். ஜோர்டனில் சிக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தின் அனுபவத்தை வைத்தும் ஒரு கதை எழுவிருக்கிறார்.
தற்போது தன் டிவிட்டர் பக்கத்தில் ஆடுஜீவிதம் படத்துக்காக தாடி மீசையுடன் இருந்த கெட்டப்பை மாற்றி, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய தாடியை எடுத்த பின்னான, சுத்தமான, ப்ரெஷ்ஷான முகத்துடன் காணப்படும் ஃபோட்டோவை அழகான கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். மனைவி சுப்ரியா மேனனுடன் எடுத்த அந்த செல்ஃபியில் அவர் கூறியிருப்பது ‘ஜிம் பாடி வித் நோ தாடி - ஃப்னைலி!’ என்று பதிவிட்டுள்ளார். பிரித்திவிராஜின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது