BREAKING: நடிகர் விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் இசையமைப்பாளர் இவரா? எதிர்பாராத COMBO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.

GVP is the music director for Chiyaan 61 announcement soon
Advertising
>
Advertising

கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.  இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார்.  அதே போல் நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.

GVP is the music director for Chiyaan 61 announcement soon

இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கினார். முரளி ஜி ஓளிப்பதிவு செய்தார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களமாக அமைந்தது. 

விக்ரம் கோப்ரா படத்தை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சியான் 61 எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன் பா.ரஞ்சித்தின் அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்தார்.

இந்த புதிய படத்திற்கு பா. ரஞ்சித் புதுக்கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு என்றும், விக்ரமின் 61வது திரைப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இதர படக்குழு விபரத்தை விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GVP is the music director for Chiyaan 61 announcement soon

People looking for online information on GV Prakash, GVP, Pa. Ranjith, Vikram will find this news story useful.