இந்திய அளவில் டிரெண்டிங்.. தளபதி 67 படத்தில் இணைந்த அர்ஜூன் & GVM..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜூன், கௌதம் மேனன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது. வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளன.

நடிகர் அர்ஜூன், கௌதம் மேனனின் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன. இந்த படத்தில் இணைந்தது குறித்து, இயக்குனர் கௌதம் மேனன், "தமிழ் சினிமாவின் சிறந்த முன்னணி கலைஞர்களோடு  இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை கேமராவுக்கு முன். தளபதி 67 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் அர்ஜூன், "தளபதி 67 எனும் ராட்சத கப்பலில் லோகேஷ் கனகராஜ் எனும் மாலுமியுடன் பயணம் செய்வது அற்புதமானது. கர்ஜிப்பதற்கான நேரம் இது" என அர்ஜூன் கூறியுள்ளார்.

இந்த தளபதி 67 படத்தின் நடிகர்கள் அறிவிப்பு டிவிட்டரில் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த படம் குறித்த பல ஹேஸ்டேக்குகள் தொடர்ச்சியாக டிரெண்ட் ஆகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

GVM and Arjun on board for Thalapathy 67 Twitter Trending

People looking for online information on Arjun, Gautham Menon, Thalapathy67, Vijay will find this news story useful.