விஜய் சேதுபதியின் படத்தில் பிரபல ஹீரோவின் தங்கை அறிமுகமாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கா/பெ.ரனசிங்கம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கிராமத்து மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் கா/பெ.ரனசிங்கம் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் பவானி ஶ்ரீ ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும், பவானி ஶ்ரீக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
Tags : Vijay Sethupathi, GV Prakash, Saindhavi, Ka Pae Ranasingam, B, Bhavani Sre