'சஞ்சிதா ஷெட்டியின்' புதிய படத்தில் நடிக்கும் 'பிரபல' இயக்குநர்! .. 'பாடல் பாடிய' GV பிரகாஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் திரைப்படம் தான் "அழகிய கண்ணே".

பிரபல இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்கும் இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். 

அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் மைனா, கும்கி, கயல், காடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பிரபு சாலமன் நடிக்கிறார். அத்துடன் இந்த திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் அறியப்படும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ் நடிக்கிறார். 

இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். இவரது இசையில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த GV பிரகாஷ் குமார் ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார் .

இதுபற்றி பேசியுள்ள இப்படத்தின் ஹீரோ லியோ சிவக்குமார்  இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படத்துக்கு A.R.அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சி அளிக்கிறார்.

ALSO READ: "இது first time இல்ல..".. ஆன்லைனில் Order செய்த உணவில் அதிர்ச்சி காட்சி! கடுப்பான நிவேதா பெத்துராஜ்! கொந்தளித்து Post!

GV Prakash Sings and prabhu solomon acts in Sanchita Shetty film

People looking for online information on Azhagiya Kanne, GV Prakash Kumar, N.R.Raghunanthan, Prabhu Solomon, Sanchita Shetty will find this news story useful.