ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடிக்கு பிறந்த குட்டி இளவரசி. குழைந்தைக்காக நடத்திய போட்டோஷூட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் புதிய மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர் என  ஒரு சேர கோலிவுட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படப்பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் குழந்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ''இதோ என் இளவரசி'' என்ற கேப்ஷனோடு, குழந்தைக்காக நடத்தப்பட்ட ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் கவர்ந்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடிக்கு பிறந்த குழந்தைக்கு அன்வி என பெயரிட்டுள்ளது குறிப்படத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி மகள் போட்டோ | GV Prakash Saindhavi couples new born baby photo released

People looking for online information on GV Prakash Daughter, GV Prakash Kumar, Saindhavi will find this news story useful.