அசுரனுக்கு பிறகு இணையும் ஜி.வி பிரகாஷ் - தனுஷ் காம்போ.. ஓப்பனிங் பாடல் குறித்த அசத்தல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார், தான் இசையமைத்து வரும் அடுத்த திரைப்பட குறித்த அசத்தல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தமிழில் வெளியான 'வெயில்' என்னும் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார். முதல் படத்தில் தான் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது இசை, அதிகம் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒரு நடிகராகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் ஜி.வி. பிரகாஷ். டார்லிங் முதல் பேச்சிலர் வரை பல இவர் நடித்த பல படங்கள் வெளிவந்துள்ள நிலையில், அடுத்தடுத்து சில படங்கள், ரிலீஸிற்காகவும் தயாராகி வருகிறது.

அசத்தல் அப்டேட்

நடிப்பு மற்றும் இசை என இரண்டையும் சரிவர பகிர்ந்து, இரண்டிலும் தனது பங்கை சிறப்பாக செய்து வருகிறார். இதில், அடுத்து தான் இசையமைத்து வரும் திரைப்படம் குறித்து, அசத்தல் அப்டேட் ஒன்றை ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். பிரபல இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில், துருவங்கள் பதினாறு என்னும் திரைப்படம் முதல் முறையாக வெளியானது.

இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக நரகாசூரன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம், இன்னும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து, அருண் விஜய் நடிப்பில் மாபியா என்னும் திரைப்படத்தையும், 'நவராசா' என்னும் அந்தாலஜியில், 'ப்ராஜக்ட் அக்னி' என்ற பகுதியையும் இயக்கியிருந்தார்.

ஓப்பனிங் பாடல்

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில், 'மாறன்' என்ற திரைப்படத்தையும் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.


மாறன் படத்தின் பாடல் ஒன்றை பற்றி தான் ஜி.வி. பிரகாஷ் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், 'மாறன் திரைப்படத்தின் ஓப்பனிங் சாங்.. மிக்ஸ் மற்றும் மாஸ்டரிங் பணிகள் நடைபெற்று வருகிறது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடலில், அறிவு ராப் போர்ஷன்களை பாடியுள்ளார். பாடல் வரிகளை எழுதியவர் விவேக்' என குறிப்பிட்டுள்ளார்.
 

 

மிகுந்த எதிர்பார்ப்பு

மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி, அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, ஓப்பனிங் பாடல் குறித்த விவரத்தை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் - ஜிவி பிரகாஷ் கூட்டணியில், பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள், மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. இதனால், மாறன் திரைப்படத்தின் ஓப்பனிங் சாங் மீதும், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gv prakash kumar - dhanush movie opening song update

People looking for online information on Asuran Tamil, Dhanush, First Single, GV Prakash Kumar, Karthick Naren, Mafia Tamil will find this news story useful.