நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | எருமை முதல் சேவல் வரை.. "இதுக எல்லாம் என் ப்ரண்ட்ஸ்" 🤩.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வீடியோஸ்!
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள
, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், #captainmiller update .......
ஆயிரத்தில் ஒருவன் Celebration of Life BGM-க்கு பிறகு கேப்டன் மில்லருக்காக படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைத்துள்ளேன், கிட்டதட்ட 3,4 bgms படமாக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்டது. mad bgms onway super excited" என ட்வீட் செய்துள்ளார்.
Also Read | இளையராஜா குழுவின் பிரபல இசைக் கலைஞர் சுதாகர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி