செல்ஃபி படத்துக்கு பின் மீண்டும் இணையும் GV பிரகாஷ் & GVM .. வெளியான பரபர டீசர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம்மேக்கர் K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் - கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் "13" டீசர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

GV Prakash Gautham Vasudev Menon Starring 13 Teaser
Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : ‘சின்ன வயசுலயே போலியோ அட்டாக்..’.. நடன மாஸ்டர் ராபர்ட்.. கண்ணீர் கதை.!

தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், K.விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள "13" படத்தின் டீசர், படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1 நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

GV Prakash Gautham Vasudev Menon Starring 13 Teaser

இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன், 'ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது' எனத் தெரிவித்து கதையின் முன்னுரையை பார்வையாளர்களுக்குச் சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகிய மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை C.M. மூவேந்தர் கவனித்துக்கொள்ள, JF காஸ்ட்ரோ எடிட்டிங்கை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக நாஞ்சில் P.S. ராபர்ட் பணிபுரிய பாடல் வரிகளை மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதுகின்றனர். சந்தோஷ் இப்படத்துக்கு நடனம் அமைக்கிறார். 'ஸ்டண்ட்' ராம்குமார் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D'One

 

Also Read | Bigg boss 6 tamil : “யாரோ சண்ட போடுறதுக்கு நாம ஏன் கடி வாங்கணும்” - சிறையில் புலம்பிய ராம், ஜனனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Gautham Vasudev Menon Starring 13 Teaser

People looking for online information on 13 Teaser, Gautham Vasudev Menon, GV Prakash will find this news story useful.