திரையரங்கில் வெளியாகும் GV பிரகாஷின் ‘பேச்சுலர்’.. வெளியான வேற லெவல் டிரைலர்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் GV பிரகாஷ் நடித்து இசையமைத்த பேச்சுலர் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது உறுதியாகி இருக்கிறது. 

GV Prakash Divya Bharathi Bachelor Trailer movie release
Advertising
>
Advertising

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் மலரத் தொடங்கியிருக்கும் GV பிரகாஷ், தொடக்கத்தில் கமர்ஷியல் கதைகளில் கவனம் செலுத்தி வந்தார்.  தற்போது அந்த கதைகளையும் இன்னும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

GV Prakash Divya Bharathi Bachelor Trailer movie release

பேச்சுலர் திரைப்படத்தில், GV பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்திருக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

GV Prakash Divya Bharathi Bachelor Trailer movie release

இப்படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். சித்துக்குமார் பின்னணி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசரில் இருந்து, ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் GV பிரகாஷ், திவ்யபாரதியின் காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருப்பது, இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகள் அழுத்தமாக உருவாகி வந்திருப்பதும் தெரிகிறது.

ஜி.டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பேச்சுலர் திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இசையமைப்பாளராக பிஸியாக இருக்கும் GV பிரகாஷ், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்திலான வாடிவாசல் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பிலான மாறன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மற்ற செய்திகள்

GV Prakash Divya Bharathi Bachelor Trailer movie release

People looking for online information on Bachelor Trailer, Divya Bharathi Bachelor, GV Prakash, Trailer movie release will find this news story useful.