பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜிவி பிரகாஷ் நடித்த 'ஐங்கரன்'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ஐங்கரன் திரைப்படம், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan :இரண்டாவது சிங்கிளுக்கு முன் வெளியான அசத்தல் Glimpse வீடியோ!!.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், கடந்த மே மாதம், திரை அரங்கில் வெளியாகி இருந்த திரைப்படம் 'ஐங்கரன்'.

ரவி அரசு இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், ஜிவி பிரகாஷூடன், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஜி. மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் கதாநாயகன் மதியின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவரது கண்டுபிடிப்புகளால் அவர் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் என்பதும் அதில் இருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதுமே இப்படத்தின் கதையாகும்.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான மதி பல்வேறு எந்திரங்களையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி, அவற்றுக்கான அரசாங்க காப்புரிமையைப் பெற முயற்சிக்கிறார். ஆனால் அது பலனில்லாமல் போய்விட்டது. ஒரு நாள் அவர் ஒரு பணக்கார தொழிலதிபரின் கோழிப்பண்ணைக்கு சென்று அங்கு அவர் கோழி இறைச்சியில் ஸ்டெராய்டுகளை சேர்ப்பதை வீடியோவாக பதிவு செய்து அதை ஆன்லைனில் வெளியிடுகிறார். இதேபோல் அவர் சுரங்க பாதை ஒன்றில் மிகவும் ஆபத்தான நகை திருடும் கும்பலையும் சந்திக்கிறார். அத்துடன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். மதி தனது கண்டுபிடிப்புகள் மூலம் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது

இது குறித்து இதன் இயக்குனர் ரவி அரசு கூறுகையில், "கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு முக்கிய சேனலில் எனது ஐங்கரன் திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஊழல் மற்றும் கலப்படம் குறித்த ஒரு சமூக செய்தியை தனித்துவமான முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே இப்படத்தின் முக்கிய அம்சம் ஆகும். ஜி.வி.பிரகாஷ் மற்றும் சக நடிகர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பார்வையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

திரை அரங்கில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற ஐங்கரன் திரைப்படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதனை காண மக்களும் ஆவலாக உள்ளனர்.

Also Read | சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா.. "நாயகியாக களமிறங்கும் பாலிவுட் நடிகை?!.. வெளியான தகவல்!!

தொடர்புடைய இணைப்புகள்

Gv prakash ayngaran television premiere on colors tamil

People looking for online information on Ayngaran, GV Prakash, GV Prakash Ayngaran Movie, GV Prakash Ayngaran Movie television premiere will find this news story useful.