ஜிவி பிரகாஷின் "அடங்காதே!".. வெளியான மரண மாஸ் அப்டேட்.. '5 ஆண்டு போராட்டம்!' - இயக்குநர் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நடித்துள்ள திரைப்படம் "அடங்காதே".

இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் அவருடன் இணைந்து சரத்குமார் நடித்து இருக்கிறார். நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்ததிலேயே வழக்கமான பாணியில் இல்லாத படமாக இந்த திரைப்படம் இருக்கும் என திரைப்பட வட்டாரங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் பணி தற்போது முடிந்து யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தைப் பற்றிய இந்த அப்டேட் ஜிவி பிரகாஷ் ரசிகர்களை மட்டுமல்லாது இப்படத்தின் இயக்குநரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இது பற்றி தமது சமூக வலைப்பக்கத்தில் பேசியுள்ள இந்த திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாம. “அன்பை தவிர வேறெதற்கும் அடங்கிப்போவதில்லை என்பதில் இப்போதும் உறுதியாகவே இருக்கிறேன்.....!! 5 ஆண்டுகால தொடர் போராட்டம் வழி நெடுகிலும் அள்ளி அணைத்து ஆரத்தழுவிய நண்பர்கள் தம்பிகள் அண்ணன்கள் தங்கைகள் மற்றும் சொந்தங்கள்.... அனைவருக்கும் நன்றி....

திரைப்பட தணிக்கை துறை படத்தை Revising committee க்கு அனுப்பினர்... தடைகளை பார்த்து பழகிய எமக்கு அதுவும் சவாலாக இல்லை ......!! அரசியல் பேசியோ தீருவோம் நீங்கள் எந்த கத்தியை கொண்டு வந்தாலும் கணக்கிலடங்கா  “CUTS”களுடன் அடங்காதே (Adangathey) திரைப்படம் விரைவில் .... திரையரங்குகளில் வெளியிடப்படும் ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: "ரணசிங்கம் பட டைம்ல ஒரு பொண்ண பாத்தேன்!".. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்கலங்க வைக்கும் பேச்சு!

தொடர்புடைய செய்திகள்

GV Prakash Adangathey movie censored directors emotional message

People looking for online information on Adangathey, GV Prakash, GV Prakash Kumar, Shanmugam Muthusamy will find this news story useful.