நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Also Read | Sardar : “வாயால் வடை இல்ல.. பிரியாணியே செய்வாரு”.. சர்தார் இயக்குநர் குறித்து எடிட்டர் ரூபன் கலகல..
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்போது, “ஒரே வருடத்தில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் கார்த்தி. இப்படத்தில் அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணிநேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தோன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார். மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும்” என்றார்.
Also Read | Sardar : "இப்படி ஒருத்தர் வெளியே தெரியாமலே இருந்துருக்காரு".. சர்தார் விழாவில் கார்த்தி.!