மலையாளம் மற்றும் தெலுங்கில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ் . இந்த படத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் தமன்னா நடித்திருந்தனர்.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சந்திரமவுலி இயக்கியுள்ளார். பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான, ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த 'கொரில்லா' படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஜீவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவன் - மாணவிக்கு இடையே நடக்கும் போட்டியைய்ம், காதலையும் கருவாக வைத்து மிகவும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.