மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், விக்ரம, மாஸ்டர் படங்களின் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கத்தில் "குலு குலு" திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Also Read | Gulu Gulu: 'மாட்னா காலி', 'அம்மா நாநா' .. மிரட்டிய சந்தோஷ் நாராயணன் - ரத்னகுமார் பேட்டி.
இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த குலுகுலு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டார்க் ஹியூமர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையும் ஒரு முக்கிய பங்காக அமைந்துள்ளது.
“வழக்கமான கேரக்டர் என்றால் அது வேற, ஆனால் காமினி என்று நாம் பார்த்த அந்த கேரக்டருக்காக தான் அமலா பால் ஆடை படத்தை தேர்வு செய்கிறார். அந்த கதாபாத்திரத்தின் புதிய தன்மைக்காக அந்த கதைக்கு ஒப்புக்கொண்டார். ஆடை திரைப்படத்தின் கதையை ஒரே புரொடியூசர் கதை கேட்டார். எழுதிய பின் எனக்கே பயமாக இருந்தது.
ஒரு பி கிரேடு படமாகவோ, உடலை வைத்து விளம்பரம் பண்ணும் படமாகவோ இது புரிந்துகொள்ளப்பட்டு விடக்கூடாது. ஆடியன்ஸ் உள்ளே வரும்போது அவர்களுக்கு ஷாக்கிங்கா இருக்க கூடாது. சர்ப்ரைஸாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அதை வைத்து தான் ஆடியன்ஸ் படத்துக்குள் வர முடியும். அதனால் அப்படி பேலன்ஸ்டான அளவில் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி இருந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Also Read | Gulu Gulu: "எப்படி அழறீங்கனு சந்தானத்திடம் கேட்டேன்.!" - மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்.!