தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரசன்னா. ஆரம்பத்தில் கியூட்டான ரோல்களில் நடித்து வந்த அவர், 'அஞ்சாதே' படம் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்பு நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஜோடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் 8 ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடினர்.
