ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | ஓடிடியில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புது படம்.. ட்ரெய்லரை பகிர்ந்த சாய் பல்லவி.!
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் முக்கிய போட்டியாளராக ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக உள்நுழைந்த ஜிபி முத்து, முதல் நாள் பயந்ததும், அவருக்கு ஆதாம், ஏவாள் உதாரணத்தை சொல்லி கமல் சமாதானம் சொன்னதும் வைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் கேமராவின் முன்னால் நின்று கொண்டு ஜிபி முத்து நிறையவே பேசுகிறார். எப்போதுமே இப்படி கேமராவை பார்த்தால் தனியாக பேசி சந்தோஷங்களை வெளிப்படுத்தும் ஜிபி முத்து, முன்னதாக தன்னுடைய குடும்பத்திற்கு ஹாய் சொல்லி இருந்தார். தான் ஜாலியாக இருப்பதாவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸின் அடுத்த கட்ட டாஸ்க்காக அனைவரும் ஒரு மைக் முன்பு என்று அதிக டெசிபிளில் கத்த வேண்டும். யாருடைய குரலில் இருந்து வரும் ஒலி அளவு அதிக டெசிபிளை தொடுகிறதோ அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும். என்ன சத்தம் இந்த நேரம் என்கிற இந்த டாஸ்க்கில் அதிக டெசிபளில் ஜிபி முத்து கத்தினார். இதை தொடர்ந்து அவர் தண்ணீர் கேட்டார். ஆனால் அசல் கோலார் தண்ணீர் தராமல் கொடுப்பதுபோல் கொடுத்து ஏமாற்றி விளையாட்டு கட்டினார். அப்போது ஜிபி முத்து டக்கென தன் ஆஸ்தான வார்த்தையான செத்த பயலே வார்த்தையை பிரயோகப்படுத்த அனைவருமே அதை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டனர்.
எனினும் யூடியூப்களில் தன் அளவில் இந்த வார்த்தைகளை பேசிய ஜிபி முத்து, இப்போது இத்தனை பெரிய ஊடகத்தின் முன்பு அவ்வாறு பேசியதை ஒரு கணம் உணர்ந்து, சக ஹவுஸ்மேட்ஸிடம், ‘எப்போதும் போல பேசிவிட்டேன். அந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்த கூடிய வார்த்தையாக இருக்கிறது, தப்பா எடுத்துக் கிடாதீங்க!’ என வெள்ளந்தியாக சொல்கிறார். இதே ஜிபி முத்து, முந்தைய நேரங்களில் சபை நாகரிகம், இடம் பொருள் ஏவல் பார்த்து நண்பர்கள் வாடா போடா என பேசுவது உள்ளிட்டவற்றை பார்த்து பேசிக்கொள்ளலாம், மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கலாம் என்றும் அட்வைஸூம் கொடுத்துள்ளார்.
Also Read | GP Muthu : "ஒழுங்கா என் கலர் ஜட்டிய அனுப்புங்க.." - பிக்பாஸிடம் தன் ஸ்டைலில் மிரட்டிய GP முத்து.!