BIGGBOSS 6 TAMIL : "இருந்தாலும் GP முத்து ரொம்ப STRICT-பா".. தனலட்சுமியிடம் கறார் காட்டிய GP முத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஃபயர் மோடில் ஜிபி முத்து செயல்படும் வீடியோ ஒன்று தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.

இதற்கு காரணம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் தான். இதனால், அடிக்கடி பிக்பாஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வலம் வருவதை நாம் பார்க்க முடியும்.

அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து செயல்பட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் பரபரவென ஜிபி முத்து இயங்கிக் கொண்டே வருவதுடன் மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக ஜிபி முத்து வைத்துக் கொள்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், தனலட்சுமியிடம் ஜிபி முத்து பேசும் விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது பற்றி ஆயிஷா, தனலட்சுமி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் சமையல் அறை அருகே நின்ற படி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கவனித்ததும் அங்கே வரும் ஜிபி முத்து, தனலட்சுமியிடம், "உங்கள் வேலை எது?" என கேட்கிறார். கிச்சன் டீம் என அவர் பதில் சொல்ல, "அந்த வேலையை மட்டும் பாருங்கள். தேவை இல்லாம எதுக்கு பேசுகிறீர்கள்?. இரவு உட்காரும் போது பேசி சண்டை போடுங்கள். இப்போது வேலையை பாருங்கள். அது தான் அவசரம்" என கூறுகிறார்.

வேலை தான் முக்கியம் என்பதை போட்டியாளர்களுக்கும் உணர்த்தி பம்பரம் போல சுழன்று எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜிபி முத்து குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Gp muthu said dhanalakshmi to concentrate on her work

People looking for online information on BB6 Tamil, Biggboss 6 Tamil, Captain, GP MUTHU will find this news story useful.