"BB6 TAMIL : தலைவருக்கு வெக்கத்த பாரு".. மனைவி பத்தி பேசுறப்போ 'FEEL' பண்ணிய ஜிபி முத்து!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் தனது குடும்பம் பற்றி ஜிபி முத்து பேசிய விஷயங்கள், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

Advertising
>
Advertising

சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. இதன் தொடக்கத்தில் போட்டியாளர்கள் ஜாலியாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கவே, அடுத்தடுத்த நாட்களில் டாஸ்க்குகள் மூலம் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத வகையிலான சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர், புதிய போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் பல விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தாலும், ஜிபி முத்து தினந்தோறும் செய்யும் விஷயங்களும் ட்ரெண்ட் ஆக தவறுவதில்லை.

இதற்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வாகி செயல்பட்டு வருவதால் முழுக்க முழுக்க அவரை சுற்றி கலகலப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது மனைவி குறித்து போட்டியாளர்கள் மத்தியில் ஜிபி முத்து பேசும் விஷயங்கள், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மைனா நந்தினி, அசீம், தனலட்சுமி உள்ளிட்டோர் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் பேசும் ஜிபி முத்து, "எங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது" என்றார். தொடர்ந்து, அக்காவுக்கு லவ் யூ சொல்லி இருக்கிறீர்களா என மைனா கேட்க, "முன்னாடி எல்லாம் ஐ லவ் யூ என நான் சொன்னதே இல்லை. இப்போது நேர்காணல் செய்ய யாராவது வரும் போது, 'என் தங்கம் ஐ லவ் யூ' என மனைவியை பார்த்து சொல்வேன். ஆனால், அவள் என்னிடம் சொன்னதே இல்லை. வெட்கப்படுவாள். மாமா என கூட என்னை அழைத்ததில்லை" என ஜிபி முத்து கூறுகிறார்.

இதன் பின்னர், அவர் அப்படி ஐ லவ் யூ மாமா என சொன்னால் உங்களுக்கு ஓகேவா என மைனா மறுபடியும் கேட்க, "அப்படி அவள் சொன்னதே கிடையாது. ஒரு வேளை சொன்னால், ஐயோ எனது பொண்டாட்டி ஐ லவ் யூ என சொல்லி விட்டார் என்று இந்த வீட்டை பத்து தடவை சுத்துவேன்" என வெட்கத்துடன் ஜிபி முத்து சொல்கிறார்.

காமெடி, கலகலப்பு என்பதை தாண்டி மனைவிக்காக ஜிபி முத்து ஃபீல் செய்யும் விஷயங்களும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Gp muthu open up about his marriage life to housemates bb6 tamil

People looking for online information on BB6 Tamil, Biggboss 6 Tamil, GP MUTHU will find this news story useful.