பிரபல சேனலில் நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து... என்ன நிகழ்ச்சி தெரியுமா... குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த செயலின் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அப்படி பிரபலமடைந்து சினிமா வாய்ப்பு கிடைத்தவர்களும்  மிக அதிகம். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. இந்நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Tiktok பிரபலம் Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில். தற்போது மீண்டும் தனது பழைய பாணி நகைச்சுவையை பின்பற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "இன்று முதல் புதிய  படப்பிடிப்புகள் ஆரம்பம்" என்ற கூறியிருந்தார். இதை பார்த்த பலரும் அவர் திரைப்படத்தில் தான் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது ஜிபி முத்து ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது. ஆதித்யா சேனலில் டிஜிட்டல் கலாட்டா 2.0 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக  இருக்கிறது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் ஜிபி முத்து நடிக்கிறார். இந்த புரோமோவை  சேனல் தற்போது வெளியிட்டுள்ளது.

பிரபல சேனலில் நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து... என்ன நிகழ்ச்சி தெரியுமா... குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

Tags : GP MUTHU

Gp muthu new avatar in popular channel show நடிகராக அறிமுகம் ஆகும் GP முத்து

People looking for online information on GP MUTHU will find this news story useful.