காணாம போன மைக்.. "இந்த வீட்டுலயே நீ தான் தில்லாலங்கடின்னு தெரியும்".. ஜிபி முத்து கலகல!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும்  கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.

இதன் பின்னர் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு மாறி உள்ள ஜிபி முத்து, மற்ற போட்டியாளர்களிடம் சேர்ந்து கலகலப்பாகவும் இருக்க ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக, அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் இணையத்தில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது ஜிபி முத்துவின் மைக் காணாமல் போன நிலையில், அதற்கு அவர் ரியாக்ட் செய்தது தொடர்பான வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருகிறது. தனது மைக் திடீரென காணாமல் போன நிலையில் தேடிக் கொண்டிருந்த ஜிபி முத்து, நேராக அமுதவாணனிடம் தேடிச் சென்றார்.

அவரிடம், "இங்குள்ள 20 பேரில் தில்லாலங்கடி வேலை பார்ப்பது நீ மட்டும் தான். என் மைக் எங்கே?. நான் ஆடை மாற்றும் போது அங்கே தான் வைத்திருந்தேன். அதற்குள் மைக்கை காணவில்லை" என கேட்டுக் கொண்டிருக்கிறார்.


தில்லாலங்கடி என வித்தியாசமாக ஜிபி முத்து சொன்னதும் அமுதவாணன் பற்றி அவர் சொன்ன விஷயமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

GP muthu mic miss on biggboss house he reacts

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, GP MUTHU will find this news story useful.