"ஷர்ட்ட கழட்டணுமா?".. புதிய ரியாலிட்டி ஷோவில் ஜிபி முத்து.. வந்ததும் அட்ராசிட்டி தான் 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நிறைய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "மனசு நெறஞ்சுருக்கு, கனவும் பலிச்சுடுச்சு".. 15 வயதில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!!..

அந்த வகையில், பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வரும் "அண்டாகாகசம்" நிகழ்ச்சியும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது.

இதில் இரண்டு அணிகளாக பிரபலங்கள் உள்ளிட்டோர் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். கேள்விகள், பரிசு பொருட்கள் என அண்டாகாகசம் நிகழ்ச்சி முழுக்க முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த படி தான் இருக்கும். அதிலும், மாகாபா செய்யும் காமெடிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும்.

சமீப காலமாக, ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் சிறந்த ஒன்றாகவும் அண்டாகாகசம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், அண்டாகாகாசம் நிகழ்ச்சியில் பிரபல யூ டியூபர் ஜிபி முத்து கலந்து கொண்டுள்ளார். முன்னதாக, யூ டியூபில் வீடியோக்கள் பதிவிட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் ஜிபி முத்து. அதிலும், நேயர்கள் எழுதும் கடிதத்தை அவர் படித்து வீடியோக்கள் வெளியிடுவது பெரிய அளவில் கவனம் பெறவும் செய்யும்.

இதற்கடுத்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்த ஜிபி முத்து, தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். முதல் இரண்டு வாரங்கள் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஜிபி முத்துவுக்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருந்தது. ஆனால், தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என தானாக முன் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறி இருந்தார் ஜிபி முத்து. இதற்கடுத்து, திரைப்படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஜிபி முத்து.

அப்படி ஒரு சூழலில் தான் தற்போது அண்டாகாகசம் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக ஜிபி முத்து பங்கெடுத்துள்ளார். அவர் தனது மனைவி உள்ளிட்டோருடன் ஒரு பக்கம் களமிறங்க, மறுபக்கம் ரோபோ ஷங்கர் குடும்பத்தினருடன் பங்கெடுத்துள்ளார். இதில் பரிசு பொருட்களை தேர்ந்தெடுக்கும் சுற்றும் உள்ளது. அதில் ஜிபி முத்து தனியாக உள்ளே செல்லும் போது சட்டையை கழற்றுமாறும் ரோபோ ஷங்கர் கூறுகிறார். இதனை நம்பி ஜிபி முத்துவும் சட்டையை கழற்றும் காட்சிகள், பார்வையாளர்கள் கவனத்தையும் பெற்று வருகிறது.

Also Read | "கொஞ்ச நேரத்துல அடிச்சுப்பாங்களோ?".. ஒண்ணா இருந்த அசிம், விக்ரமன்.. அமுதுவின் தெறி கமெண்ட்!!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu in new reality show andakakasam fun moments

People looking for online information on Andakakasam, GP MUTHU, GP Muthu in new reality will find this news story useful.