GP MUTHU : முதல் நாள் பயந்த ஜிபி முத்து.. மழையை பார்த்ததும் ஆட்டம் போட்டு கும்மாளம்.! BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில், முதல் போட்டியாளராக டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடியை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் GP முத்து. இவருக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும், பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும் அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களும் மிகவும் பிரபலம் ஆனவை.

ஆறாவது சீசனின் முதல் போட்டியாளராக GP முத்து களமிறங்கி இருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் கேமரா முன்பு சென்று அவர் புலம்பியுள்ளார். தொடர்ந்து, கமலிடம் உரையாடிய GP முத்து, தனியாக வீட்டிற்குள் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், மற்றவர்களுடன் சேர்ந்து உள்ளே வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.  இதுவும் போட்டியின் ஒரு பகுதி என கூறிய கமல், அடுத்த நபர் காலை 4 மணிக்கு தான் உள்ளே வருவார் என்றும் கூற, அதனைக் கேட்டதும் பதறிய ஜிபி முத்து, 4 மணி என்றால் மூச்சே போய்விடும் என்றும், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என பயத்திலேயே கதறினார். இதன் பின்னர், வேண்டுமென்றே கமலும் அதிகம் பயமுறுத்தி ஜாலியாக கலாய்க்க, கதிகலங்கித்தான் போனார் ஜிபி முத்து. பின்னர் அடுத்த போட்டியாளர் சிறிது நேரத்தில் உள்ளே சென்றதும், ரிலாக்ஸ் ஆனார் ஜிபிஎம்.

இதனை தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வீடியோ வெளியானது. இதில் ஜி.பி.முத்து, கேமரா முன் அசால்டாக நின்று, “ ஹே நான் சந்தோஷமா இருக்கேன்.. நீங்கலாம் ஜாலியா இருங்க..!” என்று ஃப்ளெயிங் கிஸ் முத்தத்தையும் தனது குடும்பத்திற்கு அளித்தார்.

அத்துடன் விட்டாரா என்றால் இல்லை. பின்பு மெல்ல ஜி.பி.முத்து பகலில் கண்ணயர, திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் நாய் குரைக்கும் சத்தம் , ஒலிக்கப்பட்டது. உடனே பதறி அடித்துக் கொண்டு எழுந்த மனிதர், அதனை தனக்கே உரிய பாணியில், ‘ஏ.. என்னது நாய் சத்தம் போடு’ என்று கூற சொல்ல, அருகில் இருந்த போட்டியாளர்கள் ஜாலியாக சிரிக்கின்றனர். தொடர்ந்து ஜி.பி.முத்து மழையில் டான்ஸ் ஆடுகிறார். முதல் நாள் பயந்துவிட்ட ஜிபிமுத்து இப்போது சகஜ நிலைக்கு வந்துவிட்டார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu enjoying rain in bigg boss 6 tamil ஜிபி முத்து பிக்பாஸ்

People looking for online information on Bigg boss tamil bigg boss 6 tamil, GP MUTHU will find this news story useful.