கிராமத்து 'கும்மி டான்ஸ்ல' இவ்ளோ வெரைட்டியா.. செம VIBE -ல் ஜிபி முத்து, மைனா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைனா நந்தினியுடன் இணைந்து ஜிபி முத்து நடனமாடுவது தொடர்பான விஷயம், தற்போது பிக்பாஸ் ரசிகர்களை Vibe ஆக வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Video: "பிரிட்டிஷ் பொண்ண Love பண்ணும் இந்திய பையன்".. 'PRINCE' பற்றி SK ..!

பிக்பாஸ் 6 வது சீசன் சமீபத்தில் தமிழில் ஆரம்பமானது. தொடக்கத்தில் இருந்தே வீட்டிற்குள் நடக்கும் அனைத்து விஷயங்களும் பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாகவும் மாறி வருகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் இதுகுறித்த கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பேசு பொருளாக இருப்பதையும் நாம் காண முடியும்.

அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து செயல்பட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் பல பரபரப்பான விஷயங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும் அதே வேளையில், முதல் நாள் முதல் இந்த தருணம் வரை தொடர்ந்து தானும் ஜாலியாக இருந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்து வருகிறார் ஜிபி முத்து. இதன் காரணமாக, தொடர்ந்து அவரை பின்பற்றும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் பலரது பேவரைட் நபராகவும் ஜிபி முத்து வலம் வருகிறார். அப்படி இருக்கையில், சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் "சொடக்கு மேல சொடக்கு போடுது" பாடலுக்கு மேடை ஏறி நடனமாடிய ஜிபி முத்து, சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் டான்ஸ் மோடுக்கே கொண்டு சென்றிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மைனா நந்தினியுடன் சேர்ந்து கிராமப்புற நடனமான கும்மியாட்டம் பற்றி போட்டியாளர்களுக்கு விளக்கியதுடன் நடனமாடியும் ஜிபி முத்து காட்டிய விஷயம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மணிகண்டன், அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் அமர்ந்திருக்க மைனாவுடன் சேர்ந்து கும்மியாட்டத்தில் வரும் நடன அசைவுகளை மிக அசத்தலாக ஆடி காட்டுகிறார் ஜிபி முத்து. அத்துடன் பெயர்கள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் போட்டியாளர்களிடம் ஜிபி முத்து தெரிவிக்கிறார். ஆல் ஏரியாவிலும் கில்லி என்பதை போல பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து வலம் வருகிறார் என நெட்டிசன்கள் பலரும் இதனை பார்த்து விட்டு குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Also Read | PS1: பொன்னியின் செல்வன் படத்தின் மூன்று வார மொத்த வசூல்.. தெறி மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

GP muthu dancing with myna nandhini in bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Myna Nandhini, Vijay Television will find this news story useful.