பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டிருந்த போது, ஆயிஷா மற்றும் தனலட்சுமி இருவரும் ஒத்த கருத்துடன் ஒரு புகாரை முன்வைத்தனர். அப்போது ஆயிஷா, ஜிபி முத்து மீது ஒரு புகாரை முன்வைக்கிறார். அதாவது ஜிபி முத்து மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்வதாக குறிப்பிடுகிறார். இதை ஜனனி டீல் செய்கிறார். இப்படி மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்தால் ஜிபி முத்து வெளியே சென்று படுக்க வேண்டும் என்று ஜனனி குறிப்பிடுகிறார்.
அப்போது ஆவேசமாகும், ஜிபி முத்து, “ஏன்.. எதுக்கு? நான் என்னுடைய வேலைகளை பார்த்து முடித்த பின்புதான் மற்ற அணிகளுக்கு வேலை செய்கிறேன். என்னால் அப்படித்தான் இருக்க முடியும். என் வேலைகளை மட்டும் என்னால் செய்து கொண்டிருக்க முடியாது. என் வேலைகள் முடியாமல் அப்படியே கிடந்தால், அதாவது என்னுடைய கடமையை நான் செய்யாமல் இருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்படி நான் என் கடமையில் இருந்து தவறிட்டேன்னு சொல்லுங்க.. நான் வெளிய போக தயார்.. எங்க வேணாலும் போய் படுத்துக்கிறேன்” என ஜிபி முத்து ஆவேசமாக பெட்ரூமை விட்டு வெளியே படுக்க தயார் என பேசினார்.
இதை அடுத்து பேசிய ஆயிஷா, “அவ்வாறு செய்தால் நீங்கள் எலிமினேட் ஆகிவிடுவீர்கள்” என சொல்கிறார். ஆனாலும் ஜிபி முத்து வெளியேறிவிடுவேன் என சொன்னது குறித்து தனலட்சுமி, “அதெப்படி நீங்கள் அணியை விட்டு வெளியேறி விடுவேன் என சொல்லலாம்?” என ஆவேசமாகி கேட்க, ஜிபி முத்துவோ, தான் அவ்வாறு சொல்லவில்லை என வாதிடுகிறார். பின்னர் ஆயிஷா மற்றும் தனலட்சுமியிடம்தான் பேசும்போது அவர்கள் முறைப்பது போல் பார்த்ததாக ஜிபி முத்து கூற, ஒரு கட்டத்தில் தனலட்சுமியோ ஜிபி முத்து தன்னை ஒருமையில், ஆவேசமாக மரியாதை இல்லாமல் பேசுவதாக புகார் வைத்ததுடன், ஜிபி முத்துவை பார்த்து, “நடிக்காதீங்க?” என கூறிவிட்டார்.
அப்போதுதான் ஜிபி முத்து, “நான் நடிக்கிறேனா” என எமோஷனல் ஆகிறார். மற்றவர்கள் அவரை அப்போது பிடித்துக்கொள்ள, அவர்களின் பிடியில் இருந்து விலகி தனலட்சுமியிடம் சென்று, “எம்மா நீ என் பொண்ணு மாதிரி.. நீ எப்படி என்ன நடிக்கிறேன்னு சொல்ற? நான் உங்கிட்ட என்ன மரியாதை கொடுக்கல.. உன் கால்ல விழுந்து சொல்லணூமா?” என பேசுகிறார். இதனை தொடர்ந்து தனியே சென்று டைனிங் டேபிளில் ஜிபி முத்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட அழைத்தும், அவர் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசிய ஜனனி, தனலட்சுமிக்கு அட்வைஸ் பண்ணி தனலட்சுமியை வெளியே படுக்க சொன்னார். ஆனால் முன்னதாக ஜிபி முத்துவை வெளியே படுக்க சொன்னதால் ஜிபி முத்து மனம் கஷ்டப்பட்டிருப்பதாக தற்போது கமல் முன்னிலையில் சொல்லி இருக்கிறார். ஆம், வார இறுதி நாள் என்பதால் பிக்பாஸ் வீட்டில், ஒருவாரம் நடந்த பஞ்சாயத்தை விசாரித்த கமல்ஹாசன், ஒவ்வொருவர் குறித்த நிறை குறைகளை சக ஹவுஸ்மேட்ஸ் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது ஜிபி முத்து, “நான் என்னுடைய வேலைகளை பார்த்து முடித்த பின்புதான் மற்ற அணிகளுக்கு வேலை செய்கிறேன். என்னால் அப்படித்தான் இருக்க முடியும். என் வேலைகளை மட்டும் என்னால் செய்து கொண்டிருக்க முடியாது. என் வேலைகள் முடியாமல் அப்படியே கிடந்தால், அதாவது என்னுடைய கடமையை நான் செய்யாமல் இருந்தால் கேட்கலாம்.” என கூறிய ஜிபி முத்து, இதை குறிப்பிட்டு கமல் முன்னிலையில் ஜனனிக்கு சிகப்பு கொடி கொடுத்தார்.
அப்போது பேசிய ஜிபி முத்து, மனிதாபிமானமே இல்லாமல், ஒரு லீடராக ஜனனி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், வெளியில் படுக்க வைத்துவிட்டதாகவும் கூறினார். இதை பார்த்ததும், ஜனனி , ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் பண்ணியும், ஜிபி முத்து ஜனனிக்கு ரெட் கொடி கொடுத்துவிட்டாரே.. என ரசிகர்கள் இதுகுறித்து பேசி வருகின்றனர்.
இதேபோல் ஜிபி முத்துவின் குற்றச்சாட்டு குறித்து, பேசிய ஜனனி, “நான் அவருக்காக தான் பேசினேன். அதையும் அவருக்கு புரியவைக்க வேண்டும் என நினைத்தே செய்தேன். இருப்பினும் அவருக்கு அது கஷ்டமாக இருந்திருக்கு என்பதை உணர்கிறேன், பரவாயில்லை.. அதனால் ஒன்றுமில்லை. நான் புரிந்துகொள்கிறேன்” என கூறிவிட்டார்.