துணிவு, வாரிசு எந்த படம் முதல்ல பார்ப்பீங்க?.. காரணத்தோடு சட்டுன்னு பதில் சொன்ன G.P. முத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, துணிவு & வாரிசு படங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Gp Muthu Answered about watching Thunivu Varisu Movie
Advertising
>
Advertising

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. வெளியான உருக்கமான 3-வது சிங்கிள் Glimpse வீடியோ!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

Gp Muthu Answered about watching Thunivu Varisu Movie

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட ஜி.பி. முத்துவிடம் பத்திரிகையாளர்கள் துணிவு & வாரிசு படங்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் துணிவு & வாரிசு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜி.பி. முத்து, "முதல்ல வந்து நம்ம  அஜித் சார் படத்துக்கு நான் போவேன்.

அஜித் சார் விஸ்வாசம் படத்துல நடிச்சாங்கள்ல அது ரொம்ப பிடிச்சிருந்தது. முதல்ல அஜித் சார் படத்தை (துணிவு) பார்த்துட்டு அப்பறம் இரண்டாவது விஜய் சார் படத்தை (வாரிசு) பார்ப்பேன்" என ஜி.பி‌. முத்து பதில் அளித்துள்ளார்.

Also Read | "ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Gp Muthu Answered about watching Thunivu Varisu Movie

People looking for online information on Ajith Kumar, GP MUTHU, Thunivu, Varisu, Vijay will find this news story useful.