நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் G.P. முத்து?.. அவரே சொன்ன பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அரசியல் & நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு ஜி.பி. முத்து பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "அந்த சமயத்தில் விஜய் மகிழ்ச்சியில் சிரிச்சுட்டார்".. வாரிசு இசை வெளியீட்டு விழா DJ EXCLUSIVE!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. 

டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படம் டிச.30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த OMG படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.பி. முத்து  கலந்து கொண்டார்.  அப்போது பத்திரிகையாளர்கள், கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக சொல்கிறார்களே? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த முத்து, பேப்பர் ஐடி எல்லாம் சேர்ந்து இருக்குற சங்கத்துல இருக்கேனே தவிர மத்தபடி எதுவுமில்லை. சாமான் முன்னேற்ற கழகம் என்ற சங்கம் அது. அரசியல் வேண்டாம். இப்படி காமெடியாவே இருப்போம்." என ஜி.பி. முத்து பதில் அளித்தார்.

Also Read | "நீ என் இன்னொரு மகள்".. அம்மா வரலன்னு கண்ணீர் விட்ட ஷிவினின் நெகிழ்ச்சி தருணம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Gp Muthu Answered about Contesting Parliament General Election

People looking for online information on GP MUTHU, OMG, Parliament General Election will find this news story useful.