GP MUTHU : அஜித் படத்துல எதிர்பார்க்கலாமா..? BIGG BOSS ஜி.பி.முத்து கொடுத்த செம அப்டேட்..!😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் புதிய படத்தில் நடிப்பது குறித்து பிக்பாஸ் ஜி.பி. முத்து பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "பல ஆண்டுகளாக தொந்தரவு தந்த விஷயங்கள்".. முதல் முறையாக மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத், சென்னை, பேங்காக், விசாகப்பட்டினம் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஜி.பி. முத்து, நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பது குறித்து பேசியுள்ளார்.

பிரபல துணிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில்  பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு ஜி.பி. முத்து பதில் அளித்தார். "நம்ம அஜித் சார் கூட நடிக்க கண்டிப்பாக வாய்ப்பு வரும். பேச்சுவார்த்தை நடந்தது" என ஜி. பி. முத்து கூறினார்.

Also Read | பொல்லாதவன் 15 வருட கொண்டாட்டம்.. ! பார்ட் 2 க்கு வெயிட்டிங்கா.?.. நடிகை திவ்யா வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu answer about acting in Ajith Upcoming Film

People looking for online information on Ajith Kumar, Ajith Upcoming Film, Bigg boss gp muthu, GP MUTHU will find this news story useful.