பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி பேச்சைக் கேட்டு அத்தனை ஹவுஸ்மேட்ஸ்களும் கண் கலங்கிய விஷயம், பார்வையாளர்களையும் மனம் உடைய வைத்துள்ளது.

Also Read | BB6 தமிழ் : "உடம்பு கொஞ்சம் சுகமில்லாத ஆளு".. மகனை நெனச்சு கவலைப்பட்ட ஜிபி முத்து.. Emotional பக்கம்!!
பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.
இதற்கு காரணம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் தான். இதனால், அடிக்கடி பிக்பாஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வலம் வருவதை நாம் பார்க்க முடியும்.
அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், புது டாஸ்க் ஒன்றில் தனலட்சுமி தனது தாய் குறித்து பேசும் விஷயங்கள் தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வார டாஸ்க்கில் தன்னை பற்றிய கதையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டும் என்றும் அப்படி சொல்லும் நபர்கள் நாமினேஷனில் இருந்து விடுபடுவார்கள் என்றும் ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது.
அப்போது உள்ளே சென்று பேச ஆரம்பிக்கும் தனலட்சுமி, "எங்க அம்மா தான் எனக்கு ராணி எல்லாமே. நான் விடிய விடிய வீடியோ செய்து கொண்டே இருப்பேன். விடிய விடிய எங்க அம்மாவும் கேமராவ பிடிச்சிட்டு நிப்பாங்க. கேமராவை பிடிக்கவில்லை என்றால் வீட்டில் சண்டை வரும். இப்படி தான்னு இல்லை. பயங்கரமான வார்த்தைகளால் அம்மாவை நான் திட்டி இருக்கிறேன்.
குடும்பத்தை பற்றி நான் யோசித்ததே கிடையாது. இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது, நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தப்பாய்படுகிறது என்பது. நீ உள்ளே போன பிறகு எல்லாருக்கும் தெரிஞ்சு உன் புள்ளைய எப்படி வளர்த்தி இருக்கேன்னு பாருங்கிறத சொல்லணும்ன்னு சொல்லி என் அம்மா இங்க என்ன அனுப்பி வெச்சுருக்காங்க. எங்க அம்மாவை நான் நிறைய மிஸ் செய்தேன்" என கண்ணீர் மல்க தனலட்சுமி குறிப்பிடுகிறார்.
இதனைக் கேட்டு கொண்டே இருக்கும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே கண்ணீர் மல்க தொடங்கி விட்டார்கள். ஆரம்பத்தில் ஜிபி முத்துவுடன் சண்டை போட்ட சமயத்தில், தனலட்சுமி தொடர்பாக ஏராளமான கருத்துக்கள் பரவி வந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது தனது தாய் குறித்து கண்ணீருடன் தனலட்சுமி பேசிய விஷயத்தை கேட்டு ஜிபி முத்து உள்ளிட்ட அனைவரும் கண்ணீர் கலங்கியது, பிக்பாஸ் பார்வையாளர்களை கூட ஒரு நிமிடம் உருக வைத்துள்ளது.
Also Read | மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி.. மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!! Official Update!!